சனி, 26 ஜனவரி, 2013

கடவுள் - கவிதை - கமல் ஹாசன்

கடவுள் - கவிதை - கமல் ஹாசன் 

கிரகனாதி கிரகனங்கட்கப் பாலுமேயொரு ஹசஹாய சத்தி உண்டாம்

ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியுமா ருக்கும் விளங்காததாம்

அதைப் பயர்ந்ததையு ணர்ந்ததை துதிப்பதுவன்றி பெரிதேதும் வழியில்லையாம்

நாம்செய்த வினையெலா முன்செய்த தென்றது விதியொன்று செய்வித்ததாம்

அதைவெல்ல முனைவோரை சதிகூட செய்தது அன்போடு ஊழ் சேர்க்குமாம்

குருடாக செவிடாக மலடாக முடமாக கருசேர்க்கும் திருமூலமாம்

குஷ்டகுஹ்யம் புற்றுசூளை மூலம் என்ற க்ருரங்களதன் சித்தமாம்

புண்ணில் வாழும் புழுபுண்ணியம் செய்திடின் புதுஜென்மம் தந்தருள்மாம்

கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல் சோதித்து கதிசேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்பததன் வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வெலாம் நேர்விக்கும் நாயகம் போர்கூட அதனின்செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு தரணிதந்தது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி அல்குலின் சினைசேர்க்குமாம்
அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது அணுகுண்டு ஸ்தெய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார் கருளிடும் பரிவான பரபிரம்மமே
 
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரன் உளமாற தொழுசத்தியை
மற்றவர் வைய்யுபயம் கொண்டுநீ போற்றிடு அற்றதையுண் டென்றுகொள்
ஆகமக்குல மூழ்கி மும்மலம் கழியறிவை ஆத்திகச் சலவையும் செய்
கொட்டடித்துப் போற்று மணியடித்துப் போற்று கற்பூர ஆரத்தியை
தைய்யடா ஊசியிற் தையெனத் தந்தபின் தக்கதை தைய்யாதிரு
உய்திடும் மெய்வழி உதாசினித்தபின் நைவதே நன்றெனின் நை !
 
Your parents, relatives and teachers are teaching you about god as per their belief. You started worship GOD because of the fear these people made in you. So you believe GOD???
 
After shown the right path for think, don't shut your thoughts. If you want to skip the right way and prefer to be crushed, be crushed.
 
Source: https://www.youtube.com/watch?v=k-nYPech9-k
 
செவ்வாய், 22 ஜனவரி, 2013

வாங்க பழகலாம் :)

மற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லை காதலாகவும் இருக்கலாம். இது சூழ்நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி பழகுவதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் தடையாக இருக்கும்.

இத்தனை நாளும் நாம் மற்றவருடன் பேசுவது, பழகுவது பற்றி கூச்சம் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து, நம்பிக்கையுடன் அடுத்தவரிடம் எப்படி பேசலாம், எப்படி பழகலாம் என்பதை மனதில் கொண்டு, அனைவரிடமும் நம்மால் பழக முடியும் என்பதற்கு இதோ இங்கே சில வழிகள்:

1. புது முயற்சி:

எப்பொழுதும் தொடர்ச்சியாக செய்யும் வேலைகளில் இருந்து, மனதை மாற்றி, வேறு ஏதாவது புது வேலை செய்யவும். ஒரு பழக்கத்தை திடீரென்று மாற்றுவது கடினமாக இருப்பினும், அது நல்ல பலனைத் தரும்.

எப்படியெனில் ஒரு புதிய திசையில் நம்மை மாற்றிக் கொள்வதும், பல இட மாற்றமும் மனதிற்கு பெரும் நம்பிக்கையை கொடுக்கும்

2. விருப்பு வெறுப்புகளுக்கு இடர் வராமல் பார்த்துக் கொள்வது:
நாம் அடுத்தவருடன் பழக வேண்டுமெனில், அவர்களது பார்வை நம் மேல் படும்படி, நாம் நம்பிக்கையுடன் செயல்படுவது தான் முதற்படி. உதாரணமாக, ஒரு கிளப்பில்(club) கலந்து கொள்வது அல்லது குழுவில் சேர்வது, விளையாட்டில் ஈடுபடுவது போன்றவை செய்வதால் பிரபலமாக வாய்ப்புள்ளது. அதிலும் தன்னார்வம் கொண்டு செய்தல், சிறந்த பலனை தரும்.

3. சாத்தியக்கூறுகள் அமையுமாறு இருத்தல்: முக்கியமாக மனதிற்கு பிடித்த ஒன்றை செய்வதால், மனம் அதில் அதிக ஆர்வத்தைக் கொண்டு, அதில் ஒருவகையான ஒளியை தரும்.

எந்த நேரத்திலும் விரும்பும் ஏதாவது ஒன்றை செய்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களை கவர நேரிடும். இதன் விளைவு, மற்றவர்களுடன் பழக வாய்ப்பை ஏற்படுத்தும்.

4. சிறிய முயற்சியும் கைகூடும்:
எந்த ஒரு செயலை செய்யும் போது தோல்வி வந்தாலும், அதைக் கண்டு மனதை தளர விடாமல், தொடர்ந்து முயற்சித்தால், ஒரு நாள் நிச்சயம் லட்சியத்தை அடைய முடியும்.

எனவே எந்த ஒரு சிறிய முயற்சியையும் கைவிடாமல், தொடர வேண்டும்.

5. வயதுக்கு தகுந்தாற்போல் நடந்துகொள்வது: ஒவ்வொரு வயதினரிடம் பேசும் போதும், அதற்கு தகுந்தாற்போல் அவருடன் கலந்து கொள்வதன் மூலம், நம் நட்பின் நெருக்கம் அதிகரிக்கும். இதற்கு வயது வரம்பு ஒன்றும் இல்லை. பொதுவாக மக்கள் பல்வேறு அம்சங்களால் ஈர்க்கப்படுகின்றனர். இதைப் பொறுத்து, நாம் எந்த மாதிரியான நெருக்கத்தை கொண்டுள்ளோம் என்பதை உணரலாம்.

6. தட்டி கொடுத்தல்:
உங்களை நீங்களே தட்டி கொடுத்து, செய்யும் வேலைகளை நீங்களே பாராட்டிக் கொள்வதால், மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். நெருக்கம் என்பது வெவ்வேறான மக்களுக்கு வெவ்வேறான விஷயங்களாகும். அது எப்படி இருக்கிறதோ, அப்படியே இருப்பது நல்லது. இதை புரிந்து நடந்து கொண்டால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். ஒவ்வொரு மனிதருடன் பழக பல வழிகள் உள்ளன. அதற்கு சமயமும் சந்தர்ப்பமும் அமைந்துவிட்டால் எல்லாம் உங்களுக்கு ஏற்றதாகவே நடக்கும்.
 Courtesy:
https://www.facebook.com/ThannambikkaiFans

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

"குட்டீம்மா"

"குட்டீம்மா" - நேற்று 20-01-2012 "ஏ.வி.எம்" குறும்பட வெள்ளோட்ட திரையரங்கு இதுவரை காணாத ரசிகர்கள் வெள்ளத்தில் திகைத்தது என்றே கூறலாம். மேலும் இந்த குறும்பட வெள்ளோட்டத்திற்கு வந்திருந்த ரசிகர்களில், இன்றைய திரையுலகின் முக்கிய பிரபலங்கள் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், 2012 -இன் அறிமுக வெற்றி இயக்குனர் பாலாஜி தருனீதரன் , 2012-இல் இரண்டு வெற்றி படங்களில் நடித்த கதாநாயன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சிபிராஜ் போன்றவர்கள் கலந்துகொண்டு பெருமை சேர்த்தது "குட்டீம்மா" குழுவினருக்கு கூடுதல் மகிழ்ச்சி.

"குட்டீம்மா " - இதனை ஒரு முழுமையான திரைப்படம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு கதை, நடிப்பு, நகைச்சுவை, காதல், இசை, பாடல், வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு என்று அனைத்திலும் ஒரு முழுமையினை கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் குமார். இந்த குறும்படத்தில் நான் ரசித்த வசனம், படத்தில் வரும் "குட்டீம்மா" என்ற பாட்டி, கைபேசியில் முகநூலில் மூழ்கி இருக்கும் தனது பேரனிடம் 'என்னப்பா பண்ற' என்று கேட்பார்.... அதற்கு பேரன் 'ம்ம்... FACEBOOK-ல உலகத்துல இருக்குற எல்லார்கிட்டேயும் பேசிகிட்டு இருக்கிறேன்" என்று வெறுப்புடன் கூறுவான். அதற்கு அந்த பாட்டி 'ஏன்பா.... உலகத்துல இருக்குற எல்லோரிடமும் பேசுவ... உன் பக்கத்துல இருக்குற உன் பாட்டிகிட்ட பேச மாட்டியா..?" என்று கேட்பது முகநூல் மட்டும்தான் உலகம் என்று இருப்பவர்களுக்கு சாட்டையடி.

"கணேஷ் குமார் நீங்கள் குறும்படம் எடுத்தது போதும், வெள்ளித்திரையில் விளையாடி வெற்றி காண வாருங்கள்" என்று ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் மனதார வாழ்த்தி அழைத்த வார்த்தைகளுக்கு அவ்வளவு திறம்பட உழைத்திருக்கின்றனர் "குட்டீம்மா" குழுவினர்கள். இவர்கள் அனைவரும் உண்மையிலேயே "GOOD TEAM MAA" 

புதன், 16 ஜனவரி, 2013

விமானம் பறப்பது எப்படி?

விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A. ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.
Photo: விமானம் பறப்பது எப்படி? இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான் பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும். சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது… இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு A. ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift) B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும் Weight=Lift Drag=Thrust த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும் டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும் விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும் விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும் சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின், அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது. (பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது) விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும் பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது. ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும் உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக.. விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும் இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்) விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும் அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும் இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா? அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே. அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

Source:

https://www.facebook.com/photo.php?fbid=554337864577065&set=a.196684393675749.52583.100000025687383&type=1&ref=nf

திங்கள், 7 ஜனவரி, 2013

சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்!

சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்!

ஆசிரியர் குழு

அந்த இளைஞனுக்கு வித்தியாசமாய் கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை.
அவர்கள் அவனுக்கு சரியாக வரையத் தெரியவில்லை என்ற காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டார்கள். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக சில காலம் வேலை பார்த்தான். அவன் சகோதரன் சிபாரிசின் பேரில் இடை இடையே விளம்பரங்களுக்கு சில ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைச் செய்து கிடைத்த சொற்ப சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான் அந்த இளைஞன்.

ஒரு முறை ஒரு சர்ச் பாதிரியார் சில ஓவியங்கள் வரைந்து தரும் வேலையை அவனுக்குத் தந்தார். வரைய சர்ச் அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தை அவனுக்கு ஒதுக்கித் தந்தார் அந்த பாதிரியார்.
அந்தக் கட்டிடத்தில் எலிகளின் தொந்திரவு மிக அதிகமாக இருந்தது. வரைய அந்த இடம் சாதகமாக இல்லை. அங்கு ஒரு சுண்டெலியின் அட்டகாசமோ அதிகமாக இருந்தது.

அந்த மோசமான சூழ்நிலையிலும் அந்த சுண்டெலியால் கவரப்பட்ட இளைஞன் அந்த சுண்டெலியை ஒரு இறவாத கதாபாத்திரமாகப் பின்னாளில் படைத்து விட்டான்.

அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்னி. அவன் படைத்த பாத்திரம் மிக்கி மவுஸ். பல கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை வால்ட் டிஸ்னிக்கு சம்பாதித்துத் தந்தது அந்த மிக்கி மவுஸ்.

இன்னொரு உதாரணமாக ஒரு அமெரிக்க முதியவரைப் பார்ப்போம். அறுபது வயதில் இருந்த வேலை போய், சேர்த்த செல்வமும் பெரிதாக எதுவும் இல்லாமல் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக நின்றார் அவர்.
சிறிய வயதில் இருந்தே அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். தந்தை அவருடைய சிறு வயதிலேயே இறந்து விட அம்மா வேலைக்குப் போக வேண்டி வந்தது. எனவே சிறுவனாக இருக்கும் போதே அம்மா வேலைக்குப் போகும் போது மற்ற சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அம்மா வீட்டில் இருக்கையிலும் சமையலில் தாயிற்கு உதவும் வேலையும் இருந்தது.

அம்மாவிற்கு உதவியதால் சமையல் அவருக்கு நன்றாக வந்தது. எனவே ஓட்டல்களில் சமையல்காரராக வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்தினார்.

பின் ஒரு சிறிய நகரத்தில் சிறிய ஓட்டல்கடையை நடத்தினார். அவர் தாயாரின் கைப்பக்குவத்தில் அவர் கற்றிருந்த சிக்கன் வருவல் வாடிக்கையாளர்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஒரு கட்டத்தில் அந்த நகரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அவர் அந்தக் கடையையும் மூட வேண்டி வந்தது.

அப்போது அவருக்கு வயது அறுபதைத் தாண்டி இருந்தது. வயதானவர்களுக்கு அரசாங்கம் தரும் பாதுகாப்பு தொகை 100 அமெரிக்க டாலர்களில் வாழ்க்கை நடத்த முடியாமல் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.
அவருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த சிக்கன் வருவலை அமெரிக்க ஓட்டல்களுக்கு விற்க அவர் தீர்மானித்தார்.
நாடெங்கும் பயணித்து பெரிய ஓட்டல்களுக்குச் சென்று அங்கேயே சிக்கன் வருவலைத் தயாரித்து சுவைக்கத் தந்து பார்த்தார். ஆனால் அந்த ஓட்டல்கள் அவருடைய சிக்கன் வருவலில் ஆர்வம் காட்டவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல 1008 ஓட்டல்கள் நிராகரித்தன. கடைசியில் 1009 ஆவது ஓட்டல்காரர் பீட் ஹார்மன் என்பவர் அதில் ஆர்வம் காட்டினார்.
அவருடன் கூட்டு சேர்ந்து “Kentucky Fried Chicken” என்ற தொழிலை 1952 ஆம் ஆண்டு உருவாக்கினார் அந்த முதியவர். அவர் பெயர் கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ்.

1960 ஆம் ஆண்டில் 600 க்கும் மேற்பட்ட கிளைகள் உருவாகி அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசூலில் பெரும் சாதனை படைத்தது அவருடைய சில்லி வருவல்.

1964 ல் தன் நிறுவனத்தை இருபது லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றார் கர்னல் சாண்டர்ஸ். கடைசி வரை பெரும் செல்வந்தராகவே வாழ்ந்த அவர் 1976 ல் உலகத்தின் பிரபலஸ்தர்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.
சோதனைகளைக் கடக்காமல் சாதனைகள் இல்லை. வெற்றியின் அளவு பெரிதாகப் பெரிதாக சோதனைகளின் அளவும் பெரிதாகவே இருந்திருக்கின்றன. இன்று நம்மை பிரமிக்க வைக்கும் அத்தனை வெற்றியாளர்களும் இப்படி பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்தவர்களே.

வெற்றிக்குத் திறமைகள் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. மேலே சொன்ன உதாரணங்களில் வால்ட் டிஸ்னியும், கர்னல் சாண்டர்ஸும் தங்கள் வெற்றிக்கான திறமைகளை ஆரம்பத்திலேயே பெற்றிருந்தார்கள்.
ஆனால் உலகம் அவர்களை அங்கீகரிக்க நிறையவே காலம் எடுத்துக் கொண்டது. அது வரை அவர்கள் கண்டது சோதனைக் காலங்களே. அந்தக் காலத்தில் அவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருந்தால் வரலாற்றில் அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருப்பார்கள்.

சோதனைக்காலங்களே இல்லாமல் போயிருந்தாலும் அவர்கள் இப்படி முத்திரை பதிக்குமளவு சரித்திரம் படைத்திருக்க மாட்டார்கள்.
வால்ட் டிஸ்னிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பிரபல பத்திரிக்கை கார்ட்டூனிஸ்டாக வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர் ஒரு நல்ல வருவாயுடன் பாதுகாப்பாக வாழ்க்கை வாழ்ந்து கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவராக இருந்திருக்கலாமே ஒழிய கோடிக்கணக்கான செல்வம் படைத்து புகழையும் பெற்றிருக்க முடியாது.

கர்னல் சாண்டர்ஸ் அந்த சிறிய நகரத்தில் நடத்தி வந்த ஓட்டல் கடையை மூட நேர்ந்திரா விட்டால் ஓரளவு வசதியான சம்பாத்தியம் செய்து நடுத்தர வாழ்க்கையை ஓட்டியிருக்கலாமே ஒழிய இத்தனை செல்வத்தையும், புகழையும் அடைந்திருக்க முடியாது.

உண்மையில் சோதனைக் காலங்கள் அர்த்தம் மிகுந்தவை. அந்தக் காலத்தில் தான் உண்மையில் ஒருவன் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்தக் காலத்தில் தான் விதி அவனுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. சோதனைக் காலங்களின் பாடங்கள் இல்லாமல் யாருமே வெற்றிக்கான பக்குவத்தைப் பெற்று விடுவதில்லை. எனவே மாபெரும் வெற்றியை விரும்புபவர் எவரும் சோதனைக் காலத்தில் சோர்ந்து விடக்கூடாது.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவருக்கு

என்று வள்ளுவர் கூறுவது போல் நெருப்பிலே இட்டு சுடச்சுடத் தான் தங்கம் மின்னும். மனிதனும் சோதனைகள் மூலமாகவே சாதனைகளுக்கான வழியைக் கற்றுக் கொள்கிறான். சோதனைக் காலத்தில் சோர்ந்து விட்டால் அந்தக் காலம் காட்டும் புதுப் பாதைகள் நம் கண்ணில் படாமலேயே இருந்து விடக்கூடும்.

விதி சோதிக்கும் போது பெரிய வெற்றிக்கு இந்த மனிதன் ஏற்றவன் தானா என்று கூர்ந்து கவனிக்கிறது. புலம்புவதும், குற்றம் சாட்டுவதுமாகவே அவன் இருந்து விடுகிறானா இல்லை தாக்குப் பிடிக்கிறானா என்றும் கவனிக்கிறது.
தாக்குப் பிடித்து மனிதன் தன் தகுதியை நிரூபிக்கும் போது பிறகு விதி அவனுக்கு வழி மட்டும் காட்டுவதில்லை. பின்னர் அவனிடம் மிகவும் தாராளமாகவே நடந்து கொள்கிறது. அவன் எதிர்பார்த்ததற்கும் பல மடங்கு அதிகமாகவே அவனுக்கு வெற்றியைத் தந்து அவனைக் கௌரவிக்கிறது.
எனவே சோதனைகள் வரும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். தாக்குப் பிடியுங்கள். பாடம் படியுங்கள். பக்குவம் அடையுங்கள். ஒரு கட்டத்தில் எங்கோ ஒரு கதவு கண்டிப்பாகத் திறக்கும். அதன் வழியாகப் பயணித்து சோதனையைக் கடந்து சாதனை படையுங்கள்.

Shared from : http://thannambikkai.org/2012/12/27/15908/ 

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்…

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்…

1. உயர்ந்த குறிக்கோளை அமைத்தல் ( Definite aim).

2. அதை அடையத் திட்டமிடுதல் ( Plan ).

3. அதிகமாக உழைத்தல் ( Extra work).

4. தன்னம்பிக்கை ( Self confidence ).

5. சேமிப்பு ( Saving ).

6. முதன்மையாக முயற்சித்தல் ( Initiative ).

7. தலைமைப் பண்புகள் ( Leadership ).

8. தணியாத ஆர்வம் ( Enthusiasm).

9. கற்பனைத் திறன் ( Imagination )

10. சுயக் கட்டுப்பாடு ( Self control).

11. நல்ல பர்சனாலிட்டி ( Pleasing personality ).

12. தெளிவான சிந்தனை ( Accurate thinking ).

13. கவனமாக செயல்படுதல் ( Concentration).

14. ஒத்துழைப்பு ( Co-operation)

15. தோல்விகளிலிருந்து கற்றல் ( Learning from the failure ).

16. சகிப்புத்தன்மை ( Tolerance ).

17. தெளிவும் உறுதியும் கொண்ட செயல்கள் ( Assertiveness).

18. திறமையாக தொடர்பு கொள்ளுதல் ( Communication skills).

19. சரியான நேர நிர்வாகம் ( Time management ).

20. இயற்கை நியதிகளை ஏற்றுச் செயல்படுதல் ( Acception nature ).

Shared from: http://thannambikkai.org/2013/01/03/15922/

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஆழ் மனதின் சக்தி

ஆழ் மனதின் சக்தியை விவரிக்கிறார் சுவாமி விவேகானந்தர்

உன் குறிக்கோளாக ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு விஷயத்தையே உன் வாழ்க்கை முழுவதும் நிரப்பு. அதைப்பற்றியே சிந்தனை செய், அதைப்பற்றியே கற்பனை செய், அதனூடேயே வாழ். உன் மூளை, தசை, நரம்புகள், உடலின் ஒவ்வொரு பாகமும் அந்த விஷயத்தாலேயே நிறைந்திருக்கட்டும், மற்ற எல்லா ஆசைகளையும் எண்ணங்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இதுவே வழி. நாம் உண்மையிலேயே மேன்மை பெற — மற்றவர்களும் மேன்மை அடைய உதவ — நம்முள் நாம் மேலும் மேலும் ஆழந்து சென்றாக வேண்டும்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி?

ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி?

இந்த உலகில் இருக்கும் அனைவருமே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், சமயத்தில் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் குழம்புகிறோம். இத்தகைய குழப்பங்களால் உடல் மற்றும் மனதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வாழ்க்கையே சிலருக்கு வெறுமையாகிவிடும். இத்தகைய வெறுமை ஏற்பட்டால், எப்படி உலகில் வாழ வேண்டுமென்ற ஆசை ஏற்படும். எனவே மனதை லேசாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சிலர் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்ற பெயரில் தவறான வழியில் சென்றுவிடுகின்றனர். அவ்வாறு சென்ற பின்னர் அதிலிருந்து மீள்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆகவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர், நாம் செய்வது நல்லது தானா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, பின்னர் செயல்பட்டால் வாழ்க்கையே சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இப்போது அந்த வாழ்க்கையை சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள எப்படி இருக்க வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வாழ்வை சந்தோஷமாக வாழுங்கள்.

போதுமான உறக்கம் :

இது உங்களை ஆரோக்கியமாக மட்டுமல்ல மகிச்சியாகவும் வைத்திருக்கும். ஒவ்வொரு இரவும் 8-10 மணிநேரம் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். படுக்கைக்கு போவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே மனதை லேசாக்கிக் கொள்வது நல்லது. அதிலும் பாட்டு கேட்பது மனதை லேசாக்கும். இதனால் படுத்தவுடன் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

சத்தான உணவு :

எல்லா நொறுக்குத் தீனிகளையும் குறைத்து விட்டு, தினமும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவைக் அதிகரிக்கவும். இதனால் உடலில் புத்துணர்ச்சியும், மனதில் உற்சாகமும் அதிகமாகும்.

அதிகமான நீர் :

தண்ணீரை அதிகம் குடிக்கும் போது, சருமம் பளபளப்பாக இருப்பதால் தோற்றம் பற்றி நம்பிக்கை பெருகுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, ஒரு நாளில் 8 டம்ளர் தண்ணீரைக் குடிப்பது அவசியமாகிறது.

உடற்பயிற்சி :

வேகமான நடை, மிதமான ஓட்டம், அறையில் நடனம் இப்படி ஏதாவது ஒன்றை உடற்பயிற்சிக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உடலை உறுதியாகவும், மனதை லேசாவும் உணர வைக்கும் ஒரு மாயமே உடற்பயிற்சியாகும்.

நண்பர்கள்:

உண்மையான நண்பர்களை அருகில் கொண்டிருப்பதுடன், அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தும் வழக்கத்தை கடைபிடியுங்கள். மேலும்நாம் எந்த மாதிரியான அன்பையும், மரியாதையையும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் அவர்களுக்கு வாரி வழங்குங்கள்.

உதவி :

அம்மாவுக்கோ அல்லது மனைவிக்கோ வீட்டு வேலைகளில் உதவுங்கள். வீட்டை ஒழுங்குபடுத்துங்கள். இவையெல்லாம் அவர்கள் உங்களை மேலும் நேசிக்கத் தூண்டும். இதனால் ஒருவித மனநிறைவு கிட்டும்.

பொழுதுபோக்கு :

ஏதாவது ஒன்றில் ஆர்வத்தை செலுத்துங்கள். அது இசையோ, ஓவியமோ அல்லது விளையாட்டாகவோ இருக்கலாம். இதில் கவனத்தை செலுத்தினால், சாதனை புரிய முடியும். மேலும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வளரும்.

புன்னகையும் சிரிப்பும் :

எதற்கும் சோகபாவம் கொள்ளாமல், நகைச்சுவைக்கு முகம் கோணாமல் இருக்க முயலுங்கள். புன்னகையும் சிரிப்பும் எப்போதுமே மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். சில நேரங்களில் உங்கள் புன்னகை, யாரோ ஒருவரின் சோக தினத்தையே வேறுவிதமாக மாற்றக்கூடும்.

மன அழுத்தத்தை குறைப்பது :

ஒருவரின் ஆரோக்கியத்தை கெடுப்பது மனஅழுத்தம். ஆகவே யோகா போன்ற மனப்பயிற்சிகளில் ஈடுபட்டு, மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மேலும் எழுதுவது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, இயற்கையை ரசிப்பது போன்ற செயல்களாலும் மனதை லேசாக்கலாம்.

வெளியே செல்வது :

நண்பர்களோடு வெளியில் செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, உறவினர்களை சந்திப்பது அல்லது சந்தோஷத்திற்காக பைக்கில் வெளியே செல்வது அல்லது செல்லப்பிராணியுடன் வெளியில் செல்வது போன்ற ஏதாவது ஒரு செயலை சாதாரண நேரங்களில் செய்தால், மனதில் கஷ்டம் இல்லாமல், மனமும் லேசாகும். ஏனெனில் இதுப் போன்ற சுற்றுச்சூழல் தான் எப்போதுமே மனதை லேசாக்கும் சக்தி கொண்டது.

நாம் நாமாக இருப்பது:

இந்த உலகில் பலர் தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பிப்பது, சுமையே. நம்மிடம் இல்லாததற்காக நாம் மற்றவர்களால் நேசிக்கப்படுவதைவிட, இருப்பதற்காக வெறுக்கப்படுவது எவ்வளவோ மேல். இதனால் எப்போதும் நாம் நாமாகவே பிரகாசிக்க முடியும்.

Message Source: https://www.facebook.com/photo.php?fbid=10151199216528663&set=a.10150279223763663.326068.153285913662&type=1&relevant_count=1

Thanks a lot for